ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

APV 30- அவளது நீங்கா நினைவுகள்

அவளது நீங்கா நினைவுகள்

க்ரைம் த்ரில்லர் கதை..

இருவேறு இடங்களில் நடக்கும் கதை எப்படி ஒன்னா சேருது..

லஷ்மி யும் அவ அம்மாவும் மட்டுமே இருகாகாங்க .. அப்பா இருந்தும் இல்லாத நிலைமை 🥺

இதுல அவளுக்கு காதலும் தோன்ற அதை வெளிப்படுத்தவும் அவளால முடியல.. ஏன்னா அவ வளர்ந்த சூழ்நிலை அப்படி..

இதற்கிடைல நகரத்தில் தொடர் கொலைகள் நடக்குது.? கொலைகள் ஏன் நடக்குது.? அதற்கான பின்னணி என்ன.? லஷ்மிக்கு நடந்த கொடுமைக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்.? ரெண்டு கதையும் ஒரே புள்ளியில இணையுது..

லஷ்மி ஈஸ்வர் காதல்😍😍

செல்வம் கயல் 😍😍😍😍😍

லஷ்மிக்கு நடந்த கொடுமைகள் எல்லாம் 🥺🥺🥺

கடைசில லஷ்மியோட முடிவை கேட்டு
கயல் அழுதது🥺🥺😭😭😭

ஈஸ்வருக்கு எப்போதும் லஷ்மியின் நினைவுகள் நீங்கா நினைவாக மாறியது..

சஸ்பென்ஸூடன் கூடிய கதை..

போட்டியில் வெற்றி பெ
ற வாழ்த்துக்கள் சிஸ்டர்.
 
அவளது நீங்கா நினைவுகள்!
The story runs in two parallel lines Dhruv Rudhra and Karthik investigating a series of city murders, and the school-time friendship and love of Lakshmi, Eswar, Kayal, and Selvam.
Who the killer is, why the murders happen, and whether love succeeds are revealed in the story.
Both tracks connect at one powerful point, breaking the suspense beautifully.
The punishment for those who caused Lakshmi’s suffering feels justified, sending a strong message against toxic, caste-driven cruelty.
Kayal–Lakshmi friendship is heartwarming, Kayal–Selvam scenes are enjoyable, and Eswar–Lakshmi love is emotional yet painful.
A few scenes needed clearer explanation, but overall it is an engaging and meaningful read.❤️✨
 
அவளது நீங்கா நினைவுகள்

தீரன் ருத்ரா கார்த்திக் மூணு பேரும் போலீஸ் ஆபீஸர்ஸ் தொடர்ந்து நடக்குற கொலையை கண்டு பிடிக்குறாங்க. இவங்களோட தியா டாக்டர் இவங்களோட சேர்ந்து கண்டு பிடிக்கிறாங்க.

இதுக்கு இன்னொரு பக்கம் பள்ளிக்கால கதை போகுது. ரெண்டு ஸ்டோரிக்கும் சம்மந்தம் இருக்கா. தொடர் கொலைகளுக்கு காரணம் என்னனு ஸ்டோரில தெரிஞ்சுக்கலாம்.

ஒரு பக்கம் தீரன்,ருத்ரா,கார்த்திக் கொலையாளி யாருனு தேடுதல் வேட்டை நடத்திட்டு இருக்காங்க.

இன்னொரு பக்கம் அழகான கிராமத்து காதல் கதை ஈஷ்வர் லட்சுமி, கயல் செல்வம் இவங்க ஸ்டோரி நல்லா இருந்துச்சு.

லட்சுமி, கயல் பிரண்ட்ஷிப் அவ்வளவு சூப்பரா இருந்துச்சு.

கொலையாளி இவங்க தான்னு யோசிக்க முடியல.
எந்த இடத்துலயும் அவ்வளவு அருமையா கொண்டு போய் இருந்தீங்க.

வரதராஜன் அவன் எல்லாம் மனுஷனே இல்ல. அவனை எல்லாம் இன்னும் நல்லா வைச்சு செஞ்சு இருக்கலாம். 😡😡😡😡

லட்சுமிக்கு நடந்தது ஏத்துக்கவே முடியல 😭😭😭😭😭

கிளைமாக்ஸ்ல சத்தியமா அதுல இருந்து வெளிய வரவே முடியல என்னால. ஆனால் அவளுக்கு அது தான் விடுதலை. இருந்தாலும் என்னால ஏத்துக்கவே முடியல 🤧🤧🤧🤧

ஸ்டோரி அவ்வளவு அருமையா சுவாரஸ்யமா சஸ்பென்ஸ் ஆஹ் சூப்பரா இருந்திச்சு 👌👌👌👏👏👏👏

வாழ்த்துக்கள் 💐💐💐💐
 
Pommu Novels அவர்களின் அப்ளிகேஷனில் நடக்கும் போட்டி கதைகள்
#AVP30

Imaya அவர்களின் எழுத்தில்

"அவளது நீங்கா நினைவுகள்"

துருவ் ருத்ரா மற்றும் கார்த்திக் காவல்துறை அதிகாரிகள். நகரத்தில் நடக்கும் தொடர் கொலைகளை கண்டுபிடிக்க முடியாமல் திணறுகிறார்கள். நகரத்தில் பரபரப்பாக இவர்களின் வாழ்வு.. கொலையாளியை தேடி கண்டுபிடிக்க வேண்டிய சூழல். அதற்கு ஓடிக் கொண்டிருக்கிறார்கள்..

மறுபுறம் கிராமத்து காதல் 🥰

லட்சுமி ஈஸ்வர் கயல் மற்றும் செல்வம். இவர்களின் நட்பும் காதலும் அவ்வளவு அழகு 🥰 இரு வேறு கதைகளாக அத்தியாயங்கள் மாறி மாறி வந்தாலும் இறுதியில் ஒன்றாக இணைத்தது அருமை.

லட்சுமி நிலை பாவம் 😔 கயவர்களுக்கு கிடைத்த தண்டனை சரியே 👏

லட்சுமி கயல் நட்பு அருமை 🥰

வரதராஜன்.. இவன் எல்லாம் மனுஷ பிறவியில் சேர்த்தி இல்லை 😡😡

கொலையாளி யார் என்பதை கூறிய விதம் சிறப்பு 👏

விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் நகர்ந்தது கதை நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் 🥰🌹
 
இமாயாவின்

அவளது நீங்க நினைவுகள்


தொடரந்து நடக்கும் கொலைகள்…அதை தோண்டி துருவும் போலீஸ்,.. தொடர்ந்து நடக்கும் கொலைகள்,அதன் பின்னணி ஆராய,நடந்த கொலைகளுக்கான ஒற்றுமைகள் ஒன்று தான்.

ஒரே மாதிரயாக தான் கொல்லப்படுகின்றனர்.

இதனை கொண்டு எப்படி கண்டுபிடிக்கவென,தடையம் தேடி அலைய,தடையம் கிடைத்ததா

கொலைக்கான காரணம் தான் என்ன?

கொலையாளி யார்?

என ஒரேபக்கம்,ஓய்வில்லாமல் ஓடிகொண்டிருக்கின்றனர்.


இந்த ரணகலத்திலும் தன் மேலதிகாரியின் மீது காதல்…

அந்த காதலுனுக்கோ,அடாப்சி டாக்டர் மீது அடாவடி காதல்.

இதில் யார் காதல் கைகூடியது ..

கதையின் ஓட்த்தில் கண்டறியுங்கள்.

இன்னொரு பக்கம்கிராமத்து சூழலில் பள்ளிபருவ காதல்…

அங்கிகாரம் இல்லா பெண்ணவளுக்கு, தன் காதலுக்கு அங்கிகாரம் கிடைத்து விடாது என தெளிந்த சிந்தனையுடைய பெண்தான்,விருப்பமிருந்து விலகிட தான் நினைக்கிறாள்.

அன்புக்காக ஏங்கும் ஜீவன்கள்,எல்லாம் அறிந்தும் அந்த அன்பில் நிலைதடுமாறி தான் போகின்றனர்.

அதனால் ஓதோ ஒரு வகையில்,சிலரதை தவிற பலரது திசை திரும்பி தான் போகிறது.

அதன் விளைவு அன்பு வைப்பதே ஆக பெரிய குற்றமாகி ஆறாத துயரில் ஆழ்த்திமீளா பள்ளி அமிழ்த்து விடுகிறது.

வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்கிறார்கள்.

எல்லாருக்கும் பொருந்துமா என்ன,

சமந்தமேமில்லாதவர்கள் அறுத்து எரியபடுவதற்கான காரணம் தான்.

சில காயங்கள் காலம் செல்ல வடுக்களாக கூட மாறிடும்,ஆறாத சிலாது என்றும் ஆறாத காயம் மாறாத…அதன் தாக்கம் மாறாத சினம்…பயன் என்னவோ????

ஆயிரம் கட்டுகோப்புகள் இருந்தாலும்,இந்த அவலங்களை தடுப்பது எப்படி???

சகிக்க கூட முடியவில்லை…தகிக்கறது

வலி மட்டுமே வாழ்க்கையாகிறது.


இத்தனைக்கிடையில் இரு வேறு சூழல்கள் இதமான நட்பும் கைகோர்க்கிறது, இந்த அழுத்தமான இந்த பயணத்தை இதமாக்க..

அவளது நீங்கா நினைவுகள்

நம் எண்ணங்களிலும் வலியுடன்…


வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💖 💖 💖 💖
 
Top