ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

APV 24- இதயம் துடி...துடித்திடுமா !

இதயம் துடிதுடித்திடுமா..


அன்பரசி.. - ஒரே ஒரே காதலை பண்ணிட்டு இவ படற அவஸ்தை இருக்கே அவஸ்தை.. பாவம்ங்க பாவம்..

நினைச்ச வாழ்க்கை தான் கிடைக்கல.. கிடைச்ச வாழ்க்கையாவது ஏத்துக்கலாம்னு இவ நினைக்கறா.. ஆனா கட்டிய கணவனும் உண்மையா இல்லை.. அது தெரியறப்ப அவளோட நிலைமை.? பாவம்ங்க பாவம்..

ஆழமா நேசிச்சவன் ஏன் இவளை விட்டு போறான்.? அவன் இவளை வேணாம்னு சொன்னதும் இவ தற்கொலை எல்லாம் பண்றது இருக்கே...ஒன்னும் சொல்றதுக்கு இல்ல..

கொஞ்ச நாளைக்கு பிறகு இவளோட பெத்தவங்த வேற கல்யாணம் பண்ண நினைக்க அவங்களுக்காக சம்மதமும் சொல்றா.. பாவம் அந்த கல்யாணமும் அவளுக்கு நிலைக்கல.. அதுலயும் அவ அடி வாங்கி நிற்கறா.. கடைசில அவளே அவ புருசனை அவன் லவ் பண்ணுன பொண்ணோட சேர்த்து வெச்சுட்டு கிளம்பற..

வேற ஊருக்கு போனா இவ முதல்ல காதலிச்ச துவா மறுபடியும் இவ பின்னாடி சுத்தி வர்றான்.

அவனுக்கு இவ மேல காதல் தான் எவ்வளவு.? பிறகு ஏன் இவளை விட்டுட்டு போகணும்.? அவளை இவள் ஏத்துக்கிட்டாளா இல்லையா.? கதைல தெரிஞ்சுக்கோங்க..

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
சிஸ்டர்..
 
இதயம் துடி துடித்திடுமா
அன்பரசிசிs life changes because of love and loss. After துவாரகன் leaves her, she is pushed into a marriage that also breaks her heart. Hurt and tired, Anbu walks away, changes her identity, and starts fresh in a new place.
When Thuvaaragan returns as a police officer, destiny brings them together again.
A simple story of mistakes, strength, and love finding its way back ✨
 
Pommu Novels அவர்களின் அப்ளிகேஷனில் நடக்கும் போட்டி கதைகள்
#AVP24
"இதயம் துடி..துடித்திடுமா"
கதையின் தலைப்பை போலத்தான் நாயகி அன்பரசியின் இதயமும் துடிதுடிக்கிறது. காதலும் தோல்வியுற்று திருமணமும் தோல்வியில் முடிகிறது இவளுக்கு. ஆசைப்பட்ட வாழ்வு தான் கிடைக்கவில்லை கிடைத்த வாழ்வும் நிலைக்கவில்லை. பாவம் பெண் சிறுவயதிலேயே பல துன்பங்களுக்கு ஆளாகிறாள்😔 அன்பரசியாக இருந்தவளுக்கு எந்த அன்பும் கிடைக்கவில்லை. நிலாவாக மாறிய பின் நிறைய நல்ல உள்ளங்கள் இவளை சுற்றி வலம் வருகிறார்கள். 🥰 கணவனின் துரோகம் தெரிந்து அவனை விட்டு விலகி வருவது சிறப்பு 👏 காதலித்த பெண்ணை மறக்க முடியவில்லை என்றால் இவனெல்லாம் ஏன் திருமணம் செய்து கொள்கிறான் 😡 இதில் அவன் அம்மா சகோதரியின் கொடுமைகள் வேறு 😡
துவாரகன்.. கதையின் நாயகன் அன்பின் மொத்த காதலுக்கும் உரியவன் ஆனால் ஏதோ ஒரு காரணத்திற்காக பெண் அவளை நீங்கி செல்கிறான் ஏன் என்ற காரணம் சொல்லாமலேயே. இவன் இல்லாத வெறுமை பெண் அவளை விபரீத முடிவு எடுக்கத் தூண்டுகிறது. அதிலிருந்து மீண்டு வந்தாளா என்பது கதையில்.
காதல் கொண்ட பெண்ணை கைவிட்டவன் பின்பு அவளின் பின்னே சுற்றி அவள் காதலை மறுபடியும் பெறுவதற்கு பிரம்ம பிராய்த்தனம் படுகிறான் நல்ல வேணும் இவனுக்கு 😀
கைவிட்ட காதலை திரும்ப பெற்றுக் கொண்டான் என்பது கதையில்.
விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகும் நகர்ந்தது கதை நீங்கள் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🥰🌹
 
இதயம் துடி துடித்திடுமா விமர்சனம்

இந்த கதையோட நாயகி
அன்பரசி.அவளை சுற்றித்தான் கதை நகருது ..அன்பரசியோட கணவன் சந்திரன் வேறொரு பெண்ணுடன் நெருக்கமா இருப்பதை பார்த்துடுறா..அதனால அவனை விட்டு பிரிஞ்சு வேற ஊருக்கு போயி நிலான்ற அடையாளத்தோடு வாழ்ந்துட்டு இருக்கா..அங்கே போலீஸ் அதிகாரியா வர்ரான் துவாரகன் நம்ம நாயகன்..துவாரகன் நிலாவை பார்த்துட்டு அதிர்ச்சியடைகிறான் ..அவன் பழகிய அன்பரசிக்கும் இப்போது பார்க்கும் நிலாவுக்கும் நிறையவே மாற்றங்கள். அன்பரசியோ துவாரகனை யாரென்று தெரியாமல் விலகி செல்கிறாள். துவாரகனுக்கும் மனைவி குழந்தை உள்ளது.துவாரகன் அன்பரசியை நெருங்க முயல அவளோ துவாரகனை விட்டு விலகி செல்கிறாள் ..


துவாரகனின் மேல் காதல் இருந்தும் வெறுப்பின் உச்சத்தில் இருக்கிறாள் அன்பரசி ...தன் அலட்சியத்தால் காதலை இழந்த துவாரகன் மீண்டும் அன்பரசியுடன் இணைந்தானா ? துவாரகனை மன்னித்தாளா அன்பரசி? இவர்கள் இருவரும் எப்படி இணைந்தார்கள் ?விடை கதையில்...


அன்பரசி ஆரம்பத்துல பார்க்கும் போது ரக்கர்ட் கேர்ள் மாதிரி இருந்தா..ஆனால் அதற்கு பிறகு அவ‌ஏன் அப்படி இருக்கான்ற காரணம் புரிஞ்சது 😒😒 ஒரே ஒரு காதலை பண்ணிட்டு அவ‌படுற அவஸ்தை இருக்கே அப்பப்பா 😥😥
சின்ன வயசுல அவ பட்ட கஷ்டம் தன்னுடைய காதலுக்காக‌அவள் கெஞ்சின விதம் , காதலுக்காக தற்கொலை கூட பண்ணிக்க நினைச்சது துவா கிட்ட பேசுறதுக்காக அவள் பட்ட அவஸ்தைகள், அவள் காதலின் வலி சொல்லும் தலையணைகள்😞

சரி பிடிச்ச வாழ்க்கை தான்‌ அன்புக்கு அமையல கிடைச்ச வாழ்க்கையாது‌ நல்லா அமையும்னு பார்த்தா கல்யாணம் நடந்து அவள் அனுபவித்த கொடுமைகள் கொஞ்சநஞ்சமல்ல 😞 😞 மாமியார் கொடுமை நாத்தனார் கொடுமை அனுபவிக்கும்போது அதுங்களை நல்லா வெளுக்கனும்னு தோணுச்சுப்பா 😬😬😬 அவங்களுக்கான‌ கர்மவினை திருப்தியா இருந்தது..


அவளுடைய வலிகளை கவிதையின் மூலமா வெளிப்படுத்திகிட்டது, துவாரகனிடம் தனது அழுத்தங்களை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருந்தது , அவள் பட்ட கஷ்டங்கள் சேர்ந்து அவளை தைரியம் கொண்ட பெண்ணா மாற்றியது, தன்னுடைய சந்தோசத்திற்காக செய்யுற விசயங்கள் எல்லாமே நல்லா இருந்தது..


சந்திரனை அவன் காதலி கூட சேர்த்து வைத்தது , ருத்ரன் தென்றலை சேர்த்து வைத்தது , நர்மதாக்கு சரியான அறிவுரை செய்து அவள் கணவனுடன் சரியான புரிதலை கொடுத்தது எல்லாமே சூப்பர் 👍


அன்பரசியா இருந்தப்ப அவளுக்கு யாரும் இல்லே ஆனால் நிலாவா மாறின பிறகு அவளுக்கு கிடைத்த உறவுகள் அதிகம்..அவளுக்காக எந்த சூழலிலும் உறுதுணையாக நின்னாங்க சந்திரன் ஃபேமிலி, ருத்ரன் ஃபேமிலி, அருண் ,மொழி , ஜாஸ்மின் ஃபேமிலி 👍👍குட்டி அன்புச் செல்வன் அன்பரசி பாண்டிங் நல்லா இருந்தது ..❣️


அன்பு ராகா சுருளி பாண்டிங் நல்லா இருந்தது..திருடனான ராகாவுக்கு அவனுடைய கவிதை மூலமா அவள் அங்கீகாரம் வாங்கி கொடுத்தது சூப்பர்..ராகா அவளுக்காக சர்ப்ரைஸ் ஆ அவளுடைய கவிதையை புத்தகமாக வெளியிட நினைச்சது பிடித்தது ❣️


இவளுடைய அப்பா அம்மா கேரக்டர் அருமையா இருந்தது..அவளுக்காக எப்போதுமே துணை நிக்கிற அவ பேரண்ட்ஸ் அவங்களுக்காக தனக்கு நடக்குற கொடுமைகளை சொல்லாம மறைச்ச அன்பரசி, டிவோர்ஸ்க்கு காரணம் புரியாம அவமேல கோபப்பட்டு பிரிஞ்சி இருந்தது , அவளை புரிஞ்சி கிட்டு மீண்டும் அவமேல பாசத்தோடு இணைந்தாங்க ..❣️❤️


துவாரகன் மேல ஆரம்பத்தில்எரிச்சல் என்னடா இவன் ஃபேமிலி இருக்கு ஆனா அன்பரசியை தொந்தரவு பண்ணுறான்னு.. அவனின் திருமணம் காரணம் தெரியவந்த பிறகு ஓகே னு தோணுச்சு.. ஆனா இவன் அன்பரசியின் காதலுக்கு பண்ணது துரோகம் தான் 😏 அவளை காதலிக்க வைத்து அவளுடைய கஷ்டங்களை புரிஞ்சிக்காம அவளை விட்டு விலகி போயி அவள் காதலை அலட்சியபடுத்தியதுலாம் கோவம் தான் வந்தது...😏😏


அன்பரசியின் காதல் முன் இவனின் காதல் காதலே இல்லைனு தான் தோணாச்சு...கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் போல தொலைத்த காதலை மீண்டும் தேடினால் கிடைக்குமா 😒அவள் காதலை தெரிந்து கொண்ட பிறகு இவனின் கஷ்டம் அன்பரசியின் கஷ்டத்தின் முன் பெரிதாக தெரியவில்லை 😐😐😕


அன்பரசியை அலட்சியம் செய்து அவன் செய்த தவறை எண்ணி வருந்தும்போது பாவமா இருந்தது தான் 😒 ஆனால் அன்பரசிக்காக அவன் மீண்டும் செய்த விசயங்கள் அவன் மேல் கொஞ்சமே கொஞ்சம் கோபம் போச்சு ..அன்பு எல்லாவற்றையும் மறந்து அவனை மீண்டும் ஏற்றுக்கொண்டது பிடிச்சது ...

அன்பரசி இனியாவது தனக்கு பிடித்த போல இருக்கனும்ற முடிவு பிடிச்சது...


சின்ன சின்ன எழுத்துப்பிழைகள் உள்ளன..அதை கொஞ்சம் சரி செய்தால் நல்லா இருக்கும் ரைட்டர்.

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!!!
 
Last edited:
Top