ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

APV 6- மன்னவன் மயங்கும் மலரவள்

pommu

Administrator
Staff member
APV 6- மன்னவன் மயங்கும் மலரவள்
 
மன்னவன் மயங்கும் மலரவள்

குருஷேத்ரன் நம்ம ஹீரோ அவனோட அம்மாவை பார்த்துக்க ஒரு நர்ஸ் தேடுறான். செம்பருத்தி அவனோட பார்த்துக்க வரா அவளோட குடும்ப சூழ்நிலை காரணமாக.
மணியம்மை குரு அம்மா.

அவங்களுக்கு அவளை ரொம்ப பிடிச்சி போகுது. குரு அவனோட அம்மா கூட யாரையும் சேர விட மாட்டான்.

ஒரு சைக்கோ தனமான ஹீரோ. செம்பருத்தியை அதிரடியாய் கல்யாணம் பண்ணிக்கிறான்.

அவனோட லைப் எப்படி போகுது. ஏன் செம்பாவை கல்யாணம் பண்றான்னு ஸ்டோரில தெரிஞ்சுக்கலாம்.

ஒரு முரட்டு ஹீரோ குரு. பூ போல ஹீரோயின் செம்பா அவனோட அதிரடியை எல்லாம் தாங்கிட்டு கடைசியில் அவனை ஆட்டிவிக்கிறது எல்லாம் செம யா இருந்துச்சு 🤣🤣🤣

இவன் கிட்ட பிரண்ட்டா இருந்து சுப்ரியா இவனை சமாளிக்குறது சூப்பர்.

மணியம்மை செம்பா பாண்டிங் செமயா இருந்துச்சு.

தாமரை ஸ்டோரி இருக்குனு சொல்லி இருக்கீங்க அதுக்காக வெயிட்டிங்😍😍😍

எனக்கு இதுல ரோஜாவை பிடிச்சது அவளை பத்தி இன்னும் எழுதி இருக்கலாம்.

ஸ்டோரி படிக்க விறு விறுப்பா இருந்துச்சு 👌👌👌

வாழ்த்துக்கள் 💐💐
 
#மன்னவன்_மயங்கும்_மலரவள்_விமர்சனம்

நாயகன் குருச்சேத்திரன் தனக்கிருக்கும் பிரச்சினைகளுக்கு மருந்தாக நாயகி செம்பருத்தியை, அவளுக்கு தெரியாமலே பயன்படுத்திக் கொள்கிறான். அதனால் ஏற்படும் விளைவி என்ன? என்பதே கதை ❤❤

மணியம்மா குருவின் தாய். குழந்தைதனமான கதாபாத்திரம் ❤ ரொம்ப பிடிச்சுது இவங்களை ❤

குருசேத்திரன் பெயருக்கு ஏற்றது போல கோபக்காரன். நிறைய காட்சிகளில் எரிச்சல்தான் வந்தது 🥶🥶 இவனின் செயல்களினாலும் வார்த்தைகளினாலும்.

செம்பருத்தியும் அவளின் குடும்பமும் பார்க்க பாவமாக இருந்தது😞😞 குருவின் உண்மை முகம் தெரிந்ததும் அவளின் நிலை மிகவும் பரிதாபம்.

சாம்பவி நல்ல தோழி. காதல் குரு மாதிரி கோபக்காரனை எப்படி மாற்றிவிடுகிறதுனு நல்லா சொல்லிருக்கீங்க. நிறைய இடங்களில் சிரிக்க வெச்சிருக்கீங்க 😂😂அது அருமை ❣️❣️

EIDனா என்னனு கொஞ்சம் விளக்கி இருக்கலாம். இவனுக்கும் இவங்க பெரியப்பா குடும்பத்திற்க்கும் என்ன பிரச்சினை இவன் எதுக்காக அவங்களை தோற்க்கடிக்க நினைக்கிறானு எனக்கு தெரியல. வார்த்தைகள் சில இடங்களில் சரியா முடிவடையல மற்றும் இன்னும் கொஞ்சம் செம்பருத்தியின் உணர்வுகளை அழுத்தி சொல்லீருக்கலாம். இதை தவிற நல்ல கதை ❤

மன்னவனை போல் வாசகர்களும் மலரவளில் மயங்கி போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 👍
 
மன்னவன் மயங்கும் மலரவள்

விமர்சனம்:

தன் குடும்ப சூழ்நிலைக்காக செல்வ வளம் மிகுந்த, அதிக கோப குணம் கொண்ட நாயகன் குருசேத்திரன் வீட்டிற்கு அவனின் தாய் மணியம்மையை கவனிக்க தாதியாக வரும் இளம்நாயகி செம்பருத்தி. தாதியாய் வந்தவளை தாரமாக்கிக்கொண்டதன் பின்னணி என்ன அவர்களின் வாழ்வு எவ்வாறு வளம் பெற்றது என்பதே கதைக்களம்.

குருசேத்திரனின் மனநலத்திற்கு ஆலோசனை தேவை என்பதை தனது தோழி சுப்ரியா கூறிய பொழுதில் தனக்கு மருந்து என்ன என தான் கண்டறிந்த போதிலும் இது தான் காதல் என அறியாதபொழுதும் செம்பருத்தியின் சந்தர்ப்ப சூழ்நிலைகளை தனக்கு பயன்படுத்திக்கொண்ட சுயநலவாதி நாயகனாக வருகிறான்.

என்ன நடக்கிறது என்று புரியும் முன்னரே குருசேத்திரனின் மனைவியாக நின்றிருந்தாள் செம்பருத்தி. முதல் நாளே ரொமான்சில் திளைக்க வைத்தவனை புரியாமல் விழித்தாலும் அவனை புரிந்து கொண்டு காதல் வலையில் விழுகிறாள் பேதையவள். அதன் பின் தான் குருசேத்திரன் தன்னை திருமணம் செய்த காரணங்களை அறிந்ததும் உடைந்து பின் இது தான் வாழ்க்கை என அறிந்து குருசேத்திரனை ஆட்டி வைப்பது அருமை🥰🥰.

சுயநலமாக வலம் வரும் நாயகன் செம்பருத்தியின் வரவிற்கு பிறகு, அவளின் மகிழ்விற்காகவே அவளது குடும்பத்தை மகிழ்விப்பது மற்றும் அவனது கோபத்தை குறைத்து அவளை தாங்குவது அவளின் அருகே குழந்தையாகவே மாறி அவளின் அன்பிற்கு ஏங்குவதும் என தன்னை தானே புதுமனிதனாக மாற்றிய செம்பருத்தியின் கால்களில் சரணடையும் குருசேத்திரன் அருமையே🥰🥰

வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐💐
 
Top