#மன்னவன்_மயங்கும்_மலரவள்_விமர்சனம்
நாயகன் குருச்சேத்திரன் தனக்கிருக்கும் பிரச்சினைகளுக்கு மருந்தாக நாயகி செம்பருத்தியை, அவளுக்கு தெரியாமலே பயன்படுத்திக் கொள்கிறான். அதனால் ஏற்படும் விளைவி என்ன? என்பதே கதை ❤❤
மணியம்மா குருவின் தாய். குழந்தைதனமான கதாபாத்திரம் ❤ ரொம்ப பிடிச்சுது இவங்களை ❤
குருசேத்திரன் பெயருக்கு ஏற்றது போல கோபக்காரன். நிறைய காட்சிகளில் எரிச்சல்தான் வந்தது


இவனின் செயல்களினாலும் வார்த்தைகளினாலும்.
செம்பருத்தியும் அவளின் குடும்பமும் பார்க்க பாவமாக இருந்தது


குருவின் உண்மை முகம் தெரிந்ததும் அவளின் நிலை மிகவும் பரிதாபம்.
சாம்பவி நல்ல தோழி. காதல் குரு மாதிரி கோபக்காரனை எப்படி மாற்றிவிடுகிறதுனு நல்லா சொல்லிருக்கீங்க. நிறைய இடங்களில் சிரிக்க வெச்சிருக்கீங்க


அது அருமை

EIDனா என்னனு கொஞ்சம் விளக்கி இருக்கலாம். இவனுக்கும் இவங்க பெரியப்பா குடும்பத்திற்க்கும் என்ன பிரச்சினை இவன் எதுக்காக அவங்களை தோற்க்கடிக்க நினைக்கிறானு எனக்கு தெரியல. வார்த்தைகள் சில இடங்களில் சரியா முடிவடையல மற்றும் இன்னும் கொஞ்சம் செம்பருத்தியின் உணர்வுகளை அழுத்தி சொல்லீருக்கலாம். இதை தவிற நல்ல கதை ❤
மன்னவனை போல் வாசகர்களும் மலரவளில் மயங்கி போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
