ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

APV 5- நிழலாய் தொடரும் நிழல்

நிழலை தொடரும் நிழல்

போலீஸ் ஆபீஸர் லக்ஷ்மணாவுக்கு அவளோட அத்தை பையன் அசோகன் கூட கல்யாணம் நிச்சயம் ஆகுது. அதோட ஒரு கொலை கேஸ் கண்டுபிடிக்கத்துல அவளோட டைம் ஃபுல்லா அதுலயே போகுது.

அதனால அசோகனுக்கு அவ மேல வெறுப்பு உண்டாகுது. லக்ஷ்மணாக்கு மேரேஜ் நடந்ததா கொலையாளியை கண்டுபிடிச்சாளா கதையில் தெரிஞ்சுக்கலாம்.

லக்ஷ்மணாவை சுத்தி தான் ஸ்டோரியே. அவளை நல்லா கெத்து போலீஸ் ஆஹ் அழகா காட்டி இருக்கீங்க. Avalo மாமன் குடும்பம் மேல அவ்வளவு பாசம் அவளுக்கு. அவங்களுக்காக வேலையை விடுற அளவுக்கு. ஆனால் அதுங்களுக்கு இவ மேல பாசம் இருக்கானு தெரியல 😒😒

சரியான சுயநலம் பிடிச்ச குடும்பம் 😏😏😏

அசோகனுக்கு அவன் தப்பு பண்ணிட்டு வந்தும் சப்போர்ட் பண்றவங்க லக்ஷ்மணாவை யாருமே யோசிச்சு பார்க்கவே இல்ல.இவங்க யாரையும் எனக்கு பிடிக்கவே இல்ல.

திப்பு கன்யா இதுங்கள என்ன சொல்றது தங்கச்சிக்காக என்ன வேணாலும் பேசுவானா இவன் லூசு பையன். இம்புட்டும் பேசிட்டு கடைசியில லக்ஷ்மணா மேல லவ்னு சொன்னான் பாருங்க அவனை அறையணும்னு தோணுச்சு 🤧🤧🤧

அலெக்ஸ் இவனை ரொம்பவே பிடிச்சது இவனை இன்னும் கொஞ்சம் கெத்தா காமிச்சு இருக்கலாம்.

ஆதித்யன் அக்காக்கு எல்லாம் இடத்துலயும் அவ்வளவு சப்போர்ட்டா இருந்து மனசுல நின்னுட்டான்.

லக்ஷ்மணா குடும்ப லைப் ஒரு பக்கம் கொலையாளியை கண்டு பிடிக்கிறது ஒரு பக்கம்னு நல்லா விறு விறுப்பா கொண்டு போனீங்க.

கடைசியில் அலெக்ஸ் கூட சேர்த்து வைச்சது நிறைவாக இருந்துச்சு.

வாழ்த்துக்கள் 💐💐💐
 
#நிழலாய்_தொடரும்_நிழல்_விமர்சனம்


இது இலக்க்ஷமணாங்கற பெண்ணை மையமா கொண்ட கதை ❤


இலக்க்ஷமணாவின் குடும்ப வாழ்க்கையையும் சீரியல் கொலை வழக்கையும் சமமாக கொண்டு போனது நல்லா இருந்தது ❤


இயல்பான கதாபாத்திரகள் கொடுத்தது சிறப்பு ❤ எல்லாரும் நல்லவங்கனு சொல்லாம சந்தர்ப்பவாதிகளும் சுயநலவாதிகளும் கூடதான் நம்ம வாழ்ந்தாகனும் சொன்னது நல்லா இருந்தது❤


அசோகன் சுயநலவாதி. ஆனால் தப்பு பண்ணிட்டு அதை வீட்டுல சொல்ல அவன் பட்டப்பாடு இருக்கே அதை நல்லா சொல்லீருக்கீங்க. அவனின் நண்பர்களின் நன்மாறன் நல்ல நண்பன் ❤


அசோகனின் குடும்பபமும் சரி திப்புவும் சரி தன் மகன் தன் தங்கைனு வரும்போது இலெக்க்ஷமணாவையும் அவளின் உணர்வுகளையும் புரிஞ்சுக்காம பேசுறது வெறுப்பு தான் வருது 😓😓


கனியா சராசரியான பெண். தனக்கு தன் குடும்பத்தில் இருக்கிறவங்க முன் உரிமை குடுக்கனும் நினைக்கிறாங்க. நல்ல வேலை அதுக்காக எந்த வில்லத்தனமும் பண்ணல.


திப்பு இலெக்க்ஷமணாவை புரிஞ்சுக்கவும் செய்றான் அதே சமையம் தன் தங்கைனு வரும்போது வார்த்தைகளால் காயப்படுத்துறான் எரிச்சல் வருது 🥶🥶


ஆதி நல்ல தம்பி ❤.இலெக்க்ஷமணா ஆதி பாண்ட் நல்லா இருக்கு. அலெக்ஸின் காதல் அருமை 😍😍😍 அவனின் கோபம் அக்கறை அவளையே விட்டுக்குடுக்கிறது எல்லாமே எனக்கு ரொம்ப பிடிச்சது ❣️❣️


இலெக்க்ஷமணா கதாபாத்திரம் நல்லா இருந்தது❤ வேலை திருமணம் குடும்பம் முடிஞ்ச அளவுக்கு எல்லாமே சமமாக கையால நினைக்கிறாங்க. எந்த சூழ்நிலையிலும் தன் கண்ணீரையே காட்டாத பொண்ணு குடும்பமும்னு வரும் போது அழுகறது. ரொம்ப பாவமாகவும் இருந்தது😓 மற்றவங்க உணர்வுகளை புரிஞ்சுக்குற மதிக்கிற இலைக்ஷமணாக்கு நிச்சயம் அசோகன் சரியான இணையில்லை.


ரொம்ப விறுவிறுப்பான நல்ல கதை ❤ போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள் 👍
 
Last edited:
அஞ்சலியின் பார்வையில் நிழலாய் தொடரும் நிழல்
திருமணத்தையும் வித்தியாசமான வழக்கையும் எதிர் கொள்ளும் நாயகி இலக்ஷ்மணா இரண்டிலும் வெற்றி அடைந்தாளா? என்பதை சொல்லும் சுவாரசியமான கதை.
இலக்ஷ்மணா அன்பும் அழுத்தமும் நிறைந்த துணிச்சலான பெண்.திருமணத்திற்காக தன்னால் முடிந்தவரை தன்னை மாற்றிக்கொள்ளும் விதம் அருமை.சிறிய மஞ்சள் துண்டு காகிதத்தை வைத்து வழக்கை விசாரிக்கும் விதம் அருமை.
அசோகன் தடுமாற்ற மனதில் தத்தளிப்பவன். அலெக்ஸ் தன்னுடைய கரும்பக்கத்தை காதலுக்காக மாற்றி கொண்டு காத்திருக்கும் விதம் நன்று.திப்பு சுல்தான் தங்கையின் வாழ்விற்காக இலக்ஷ்மணாவிடம் நடந்து கொள்ளும் விதம் சரியல்ல.
கன்னியாகுமாரி காத்திருந்து காதலில் வெற்றிகொண்டாலும் வாழ்வை தக்க வைக்க பயம்.இலக்ஷ்மணாவின் மாமா அத்தை வளர்த்த பெண்ணை பெற்ற மகனுக்காக விட்டுக்கொடுத்துவிட்டனர். ஆதித்தன் அக்கா மீது கொள்ளும் பாசம் அருமை.
வரலாற்று இடங்களும் அதன் காரணங்களும் மிக அருமை.மொத்தத்தில் கதை மிக நன்றாக இருந்தது.போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
 
நிழலாய் தொடரும் நிழல்!

விமர்சனம்:

இலக்ஷ்மணா கதையின் நாயகி தன் வளர்ப்பு குடும்பத்தின் மேல் கொண்ட பாசம், அவளின் திருமணம்? அவள் மேற்கொண்ட சீரியல் கில்லர் வழக்கு என அனைத்தையும் உணர்வுரீதியாகவும், அறிவிப்பூர்வமாகவும் கையாளும் விதமே கதையின் கருவாகும்.

அசோகனுக்கும் இலக்ஷ்மணாவிற்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் அவளின் வேலைப்பளு காரணமாக நேரம் ஒதுக்கமுடியாத நிலையில் புரிந்துகொள்ள முயற்சித்தாலும் சராசரி மனிதனாக தோற்று போகின்றான் அசோகன். அதோடு தன்னை அளவிற்கு அதிகமாக காதலிக்கும் ஒரு பெண் இருக்கிறாள் என்று அறியவும் இரு பெண்களையும் ஒப்பிட்டு கன்னியா புறம் மனம் சாய்கிறது.

நாயகி இந்த திருமணத்தால் மனம் உடைந்தாலும் குடும்பத்தின் மேல் கோவம் கொண்டாலும் அதிலிருந்து மீண்டு வேளையில் கவனம் செலுத்த முயன்றாலும் கன்னியா, திப்பு, மற்றும் தன் குடும்பம் மூலமாகவே மீண்டும் மீண்டும் காயமுற்று மரணம் வரை சென்று மீண்டு வருகிறாள்.

அலெக்ஸ் கதாபாத்திரம் பல கருப்பு பக்கங்களை கொண்டாலும் நாயகிக்காகவே புதுமனிதனாக மாறி காத்திருந்து அவளுக்கு பாதுகாவலனாக மாறுவதும் சிறப்பு.

இறுதி வரை நாயகன் யார் என்று ஒரு சஸ்பென்ஸ் ஆகவே வந்து அப்பாடா இவர் தான் நாயகனா என்று மகிழ்வில் முற்று பெற்றது அருமை.

இலக்ஷ்மணா தைரியமானப் பெண்ணாக வந்து மனதை நிறைக்கிறார். இறுதியில் தான் எடுத்த வழக்கில் வெற்றியும் பெறுகிறார்.



வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐 💐
 
Top