ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

16. உயிரிலே சடுகுடு ஆடினாய்- நாவலுக்கான விமர்சனங்கள்

pommu

Administrator
Staff member
16. உயிரிலே சடுகுடு ஆடினாய்- நாவலுக்கான விமர்சனங்கள்
 
பொம்மு நாவல்ஸ் குறுநாவல் போட்டி

T22விதையில் இருந்து விருட்சம் வரை

உயிரிலே சடுகுடு ஆடினாய்

கதைஇல~ 16

ஷாயினி விமர்சனம்.

நாயகன்
: சசிதரன் நாயகி : அருந்ததி

தன்னைக் கடத்தி வைத்திருந்த அயோக்கியன் ஆதித்யனிடமிருந்து சுயமாகவே தப்பித்து வெளியில் வரும் நாயகி அருந்ததி , தனது தோழி சுபாவிடம் தான் இருக்கும் இடத்தை சொல்பவள், அவள் அறிவுரைப்படி சென்னையிலிருந்து தனது பிறந்தக இடமான காஞ்சிபுரத்தை நோக்கிச் செல்லும் செல்லும் பேருந்தில் கடந்த கால காதல் நினைவுகளுடன் தனது வாழ்க்கையை எண்ணியவாறே பயணிக்க, அவளது மனதுடன் இக் கதையான உயிரிலே ஊசலடினாய் கதையும் பயணிக்க ஆரம்பிக்கிறது..

ஊரிற்கு செல்லும் பெண்ணவளின்
மன உணர்வுகள் அங்கே , அவள் உயிருக்கு உயிராக நேசிப்பவனால்
ஒரு கட்டத்தில் காயப்பட, அபலைப் பெண்ணவள் நிலை?

பக்கத்திலிருந்தும் தனக்கு வேண்டிய
சரிபாதி யாரென்று புரியாமல் நிழல் மாயை மோகினியிடம் மயங்கி கிறங்கும் நாயகன் ஒரு கணத்தில்
தன்னுடைய நிஜத்தை அருகில் இருந்தும் பெற முடியாது குற்ற உணர்வில் அவன் உயிரோ ஊசலாட தவிக்க

இரத்த பந்தம் குற்றம் செய்தாலும்
நியாயத்தின் இலக்கணமாக அதை
தட்டிக்கேட்கும் உற்ற நண்பனாக தேவ்

காதல் உயிர் ஊசலாடிய நாயகன்
நாயகி இருவரும் தமது வாழ்வில் ஒன்றென மனம் ஒன்றி கலந்தனரா?

இவர்களின் வாழ்வில் வந்த மோகினி
திரும்பவும் நாயகனின் வாழ்வில் வர
இருவரினதும் நிலை?நாயகனின் அசண்டையீனம் பெண்ணவளின் உயிர் ஊசலாட

தன்னவளின் உயிர் ஊசலாட்டத்தில்
நாயகன் என்னவாகினான் அவனின் தவிப்பின் பிரதிபலிப்பு என்ன? அறிய
படித்து மகிழுங்கள் அன்பு வாசக தோழைகளே!

போட்டியில் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் ஆசிரிய தோழியே!💐💐💐ei803FW23172.jpg

●●●●●●●●●●●●●●●●●●●
கதை திரி

●●●●●●●●●●●●●●●●●●●●
கருத்து திரி

 
ஹாய் சகி..🥰
உங்கள் கதை சூப்பரா இருந்தது..
முதலில் எல்லாம் சசிதரன் மீது கோவம் கோவமாக வரும்.
அவன் அருந்ததிக்கு செய்த துரோகத்தை நினைத்து.
ஆனால் இப்போது என்னவென்றால் அவன் காதலை பார்த்து இருந்த கோபமும் சென்று விட்டது..

அருந்ததி ❤️❤️
தேவ் நல்ல தோழன் 💞
கதை அருமை..
வெற்றி பெற வாழ்த்துக்கள்..💜💜
 
  • Love
Reactions: T22
Hi..hi..🙋
Story super sis..
Unga writing Nalla irundhuchu..
And arundadhi love super ❤️♥️

Thanaku therinja vayasula irundhe Avan meala love..
But Sasi than adha miss pannitan..
Hasini pinnala sutthi unmayana anba ilandhutan..😡

Dhev very good friend..💞
And suba also good friend..

Superb story sis
 
  • Love
Reactions: T22
வணக்கம் சகோதரிகளே ..

#பவாவிமர்சனம்

#உயிரிலேசடுகுடுஆடினாய்

#விருட்சம்16

பருவயதின் காதல் நிலை பசுமரத்தாணி நினைவாக
பக்கம் வந்த போது சொல்லாது செல்லாது என நினைக்க..

பூவுக்குள் பூகம்ப தரிசனமாய் நேசன்
பூமகளை பூமிக்குள் புதைக்க..

காதலும் தூரம் நேசமும் தூரம்
மீண்டும் மீண்ட நிலை விதிகையில் பெண்ணவள்..

உயிரிலே சடுகுடு ஆடி என் உயிரோவியம் நீயென நினைக்க
ஊஞ்சலானதோ மனதோ தென்றலாய் ஆடி மகிழ..

சசிதரன்.: வந்தவுடன் பிடித்த நிலை.. இவனின் ஒரு செயலால் பிடிக்கவில்லை ...போக போக பிடிக்காத நாயகன்
முடிவில் ஏனோ பரவாயில்லை ரகமாய் எனக்கு.
ஆனாலும் ஹீரோவாச்சே சரி ஓகே ரகமாய் போச்சு.❤❤

அருந்ததி: காதலின் அழகு பாவை. கடைசிவரை இவளின் காதல் அசத்தலாவே இருந்தது. அருமையாகவும் இருந்தது❤❤❤

தூக்கி எறிந்த காதலுக்காக பெற்றோரை விட்டகல்வது பிடிக்கவில்லை எனக்கு இவளிடம்.😐

தேவ்: அருமையான நண்பன். நேர்மையான தம்பி. இவனின் இருப்பக்க சார்பு நட்பின் உன்னதம் அருமையே.💓💓

ஹாசினி: வந்தாள் சென்றாள் என்ற கேள்விகுறி பெண்.🤔

ஆசிரிய தோழியே. கதைக்கரு அருமையக இருந்தது. அதி பாத்திரம் மிகவும் அருமை. பட்டு பட்டென கேட்கும் இடமெல்லாம் மிகவும் அருமை. 👏👏👌

தேவின் பாத்திரம் சபாஷ் அழகாக கொண்டு சென்றீர்கள் நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்ற கணக்காக👌👌👌👌👌

இன்னும் சசிதரன் பாத்திரத்தை வலுவேற்றி இருக்கலாம் மா😊

ஆனாலும் கதையில் ஏதோ ஒரு தோய்வு இன்னும் கொஞ்சம் மெனக்கெடல் எடுத்து இருக்கலாமோ என நினைக்கத் தோன்றியது😊.

நிறைய இடங்களில் சிலவார்த்தைகளை முடிக்கவே இல்லை தொக்கி நிற்கிறது. கவணித்து கொள்ளுங்கள் மா.
எழுத்து பிழைகளை சரி பாருங்கள் நிறையமா.😍

ஆனாலும் ஆரம்பம் முதல் இறுதிவரை சுவாரசியங்கள் குறையவில்லை அழகாக கொண்டு சென்றீர்கள் .வாழ்த்துக்கள் மா.👏👏

போட்டியில் வெற்றி பெறவும் வாழ்த்துக்கள் மா.💐💐
 
  • Love
Reactions: T22
Top